PDF வடிவத்தை படிக்க லிங்க்கை கிளிக் செய்யவும்
https://ebesunderraj.in/wp-content/uploads/2025/06/Divine-Healing-Medical-Healing-Tamil-PDF.pdf

தெய்வீக சுகமும்
மருத்துவ சுகமும்
(கேன்சர் நோயில் இருந்து அற்புத விடுதலை எனது அனுபவ சாட்சி)
எபி சுந்தர் ராஜ்
Dr. Ebe Sunder Raj is a former Engineering Professor,
Management Trainer, Social Activist and Spiritual Mentor.
Page 1
சமர்ப்பணம்
போக்கிடமற்ற என் ஆக்கினையாவையும்
நீக்கிடவே மரம் தூக்கி நடந்திட்ட பொற்பாதத்திற்கு.
உள்ளடக்கம்
- முன்னுரை
- எனது நோயும் ஆண்டவர் அருளும்
- கற்றுக் கொண்ட பாடங்கள்
- உங்கள் கேள்விகளுக்கு பதில்
- விசுவாசத்தை வளர்க்கும் வேத வாக்குகள்
- Bibliography
- Acknowledgements
Free circulation online is permitted.
Copyright © 2010 No part of this book shall be altered. For printing this book prior written permission must be obtained from the Author.
Page 2
என் கனவும் நனவும்:
2003-ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள என் வீட்டில் நான் இருக்கையில் பின்வரும் கனவு கண்டேன் நான் மிக அரிதாக கனவு காண்பதுண்டு. இதுவோ வழக்கத்திற்கு மாறான ஓர் கனவாயிருந்தது. “நான் என்னுடைய வழக்கமான படுக்கையில் படுத்திருந்தேன் திடீரென்று நான் எழுந்தபொழுது என்னுடைய மெத்தையிலிருந்து ஊதுபத்தியைப்போல சிறிய அளவில் புகை வருவதைக் கண்டேன் என்னுடைய வலது உள்ளங்கையால் அதை அணைத்து விட்டு, மீண்டும் நான் தூங்கினேன். சிறிது நேரங்கழித்து நான் எழுந்தபொழுது மெத்தையின் கீழ்ப்பகுதி முழுவதும் நெருப்பில் இருந்தது. நான் தண்ணீர் ஊற்றி அதை அணைக்க முயற்சித்தேன்.”
ஆண்டவரின் தூய அருளால் கடந்த ஆண்டுகளிலெல்லாம் நான் மிகவும் ஆரோக்கியமுடையவனாக இருந்ததால், இக்கனவு என்னுடைய சுகத்தைப் பற்றியது என ஒருபோதும் அர்த்தங் கொள்ளவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு என்னுடைய முதுகின் வலதுபக்கத்தின் கீழ்ப்பகுதியில் வலி உண்டாயிற்று. பரிசோதனைக்காக நான் மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் என்னைப் பரிசோதித்துவிட்டு, பிரதான மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறினார். அங்குள்ள டாக்டர் (prostate) சுரப்பியின் தாக்கத்தினால் வலி உண்டானது என நினைத்தார். எனவே, சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான மாத்திரை எனக்குக் கொடுக்கப்பட்டது. முதுகு வலி குறைந்தது. எல்லாவற்றையும் நான் மறந்து போனேன்.
உடல்நலக் குறைவு:
2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு உடல் பரிசோதனைக்காகச் சென்றேன். அது சிடி ஸ்கேனுடனான விரிவான சோதனை. அதில் எனது வலது சிறுநீரகத்தில் 5 சென்டி மீட்டர் அளவில் பெரிய கட்டியாக புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த டாக்டர் பழுதுபட்ட எனது சிறுநீரகத்தின் பகுதியை ஆப்ரேஷன் மூலம் அகற்றி விட்டு, அவசியமானால் பின்னர் முழு சிறுநீரகத்தையே நீக்கி விடலாம் என்றும் கூறினார்.
Page 3
இரண்டாவது அபிப்பிராயத்தை அறியும்பொருட்டு நான் சிறுநீரகத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஓர் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்குள்ள டாக்டர்கள், புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்தும்படி Needle Aspiration பரிசோதனை செய்யலாம் அல்லது அதற்கு மாற்றாக, இதனை மேலும் 3 மாதங்கள் வளரவிட்டு, அதன் வளர்ச்சி அசாதாரணமாக இருந்தால் அதன் பின்னர் ஆப்ரேஷன் செய்யலாம் என்று ஆலோசனை தந்தார்கள்.
இரண்டு அபிப்பிராயங்களும் எனக்குத் திருப்திகரமாக இல்லை. எனவே, டாக்டர் ஷியாம் பிரசாத்துடன் ஆலோசித்தேன். முக்கியத்துவம் வாய்த்த அந்த வாரத்தில் அவர் மிகவும் ஊக்கமும், ஆலோசனையும் அளித்தார். அவருடைய அறிவுரையின்படி வேலூரிலுள்ள CMC கிறிஸ்தவ மருத்துவமனைக்கு செல்லும்படி நாங்கள் தீர்மானித்தோம்.
வேலூரிலுள்ள MUT (பணியாளரைத் தாங்கும் ட்ரஸ்ட்) நிர்வாகத்தார் நான் ட்ரஸ்ட் இல்லத்தில் தங்குவதற்கும், CMC மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும் ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார்கள். ட்ரஸ்ட் ஊழியரும், அதன் நிறுவனரான சகோதரர் J.J.ரத்னக்குமாரும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் மகத்தான பணியாற்றுகிறார்கள்.
நான் மருத்துவமனையில் சேருவதற்கு முந்தின நாள் எங்களுக்கு கிடைத்த அருள் வாக்கு சங்கீதம் 91:14-16. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் என்னுடைய அன்றாட வேத தியானப் பகுதி 1 பேதுரு 2:24. என்னுடைய மனைவியின் வேத பகுதி 2 இராஜாக்கள் 20:46 அதே நாளில் பெராக்கா சபையின் போதகர் ஜெயசீலன் சென்னையிலிருந்து என்னை தொலைபேசியில் அழைத்து இதே வேதபகுதியை அருள் வாக்காக கொடுத்தார்.
———————
சங்கீதம்-91:14-16 “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன் என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்”.
1 பேதுரு 2:24 “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார் அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்”
2ராஜா 20:46 உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன் மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.”
Page 4
என்னை சோதித்த டாக்டர் மிகவும் நற்சாட்சி உள்ள கிறிஸ்தவர் ஆப்பிரேஷனுக்குப் பின் நோய் மீண்டும் எனக்கு வருவதற்கான சாத்தியக்கூறு 20 சதவீதம் இருப்பதாகவும், அவ்விதம் ஏற்படுமாயின் அதன்பின் எவ்வித சிகிச்சையுமில்லை (No cure) என்றும் கூறி என்னை எச்சரித்தார்.
பாஸ்டர் நெகேமியா மருத்துவமனையில் என்னைச் சந்தித்து யாத்திராகமம் 15:26ஐ வாக்காகத் தந்தார் அன்று என் பகுதி சங்கீதம் 30:23
என்னுடைய அறுவை சிகிச்சை:
ஜூலை இரண்டாம் தேதி எனக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது தேவபக்தியான நர்ஸ்மாரும், மருத்துவர்களும் அநேகர் என்னைச் சுற்றி இருந்தபடியால் நான் நிம்மதியாக இருந்தேன். வியாபார ரீதியான மருத்துவமனைகளைப் போலில்லாமல், ஏழைகளுக்குப் பணியாற்றும் அவர்களின் சேவை தெளிவாய் விளங்கிற்று என்னுடைய வலது சிறுநீரகம் நீக்கப்பட்டது. ஆப்பரேஷன் நடந்த வேளையிலும், அதற்கு முன்னரும், பின்னரும் மூத்த தேவஊழியர்கள் சிலர் வந்து எனக்காக ஜெபித்தார்கள் என் மகள் ஷீபா குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து வந்தாள் எனது உடல் நலத்தைக் குறித்து மிகவும் கவலையாய் இருந்தாள் . இந்நாட்களில் மற்றவர்களை மன்னிப்பதும், மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்பதும் என்னுடைய தலையாய அப்பியாசமாயிற்று என்னுடைய கடந்த காலத்தை சிந்தித்தும், நினைவுபடுத்தியும் எனது உறவுகளை சீர்ப்படுத்த என்னாலியன்ற விதத்தில் முயற்சித்தேன் நேரடியாகப் பேசக் கூடாதவர்களிடம் ஒப்புரவாகும்படி கடிதங்கள் எழுதினேன் பெரும்பான்மையாக என்னுடைய குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் எனக்கு சுமுகமான உறவு இருந்தது. என் இளவயது நாட்களில் Laymen’s Evangelical Fellowship- இடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் இது. இருப்பினும், என்னுடைய பொறுப்புகளில் சம்பந்தப்பட்ட சிலருக்கு எதிராக எனக்கு இருந்த கடினப்போக்கை சரிப்படுத்தினேன்.
Page 5
மனைவியின் அறுவை சிகிச்சை:
என்னுடைய ஆப்பரேஷன் முடிந்த பின்னர், என் மனதில் அவசரமாய் இருந்தது. என் மனைவியின் இடுப்பில் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சையாகும். இது இளவயதில் ஏற்பட்ட ஓர் நோயினால் உண்டான பாதிப்பை சரிசெய்யத் தேவையானது நான் இறந்து போனால் என் மனைவி தனியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குள் எழும்பினது இது நுட்பமான ஆபரேஷனாக இருந்ததாலும், சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையின் மிகக் கண்டிப்பான வரையறைகளினாலும் (உதவியாளர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை) மனைவியின் ஆபரேஷனுக்குப் பின் நானே அவளோடிருந்து கவனிக்க வேண்டியதாயிருந்தது. இதில் சுமார் இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
எங்கள் மகனுக்கான மணப்பெண்:
உடனடியாக என்னுடைய மகன் மார்ட்டினுக்குப் பெண் தேட ஆரம்பித்தோம். ஆறு மாதங்களுக்குப் பிற்பாடு நான் CMC மருத்துவ மனைக்கு follow up பரிசோதனைக்காக செல்வதற்கு முன் மகனை குடும்ப வாழ்க்கையில் அமர்த்திவிட வேண்டுமென்ற அவசரம் எனக்குள் எழுந்தது.
ஏற்ற பெண்ணைத் துரிதமாகத் தெரிந்தெடுக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். எங்கள் மகன் எங்களின் வாஞ்சையின்படி முழுநேரக் கிறிஸ்தவப் பணிக்குச் செல்லக் கூடாமலிருந்தபடியால், தேவபக்தியுள்ள குடும்பத்திலிருந்து விசுவாசியும், ஆவிக்குரிய அபிஷேகத்திற்கு நாட்டமுள்ளவளும், ஏதேனும் ஓர் கிறிஸ்தவ சேவையில் பணியாற்றுபவளுமான ஓர் பெண்ணைத் தொந்தெடுப்பது எங்களுடைய இலக்காயிருந்தது. மற்ற கம்பெனி, நிறுவனங்களில் பணியாற்றுகிற கணிசமான வருவாய் உடைய பெண்களிடமிருந்து offers வந்தன.
Page 6
எங்களுடைய மகனுக்கு இவ்விதமான பெண்தான் வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்த வேளையில் எங்கள் மனதிலிருந்த குறிப்பிட்டப் பெண்ணின் வீட்டார் பதில் வேறுவிதமாயிருந்தது. பெண் பார்க்க மற்றுமொரு round தேடுதலைச் செய்ய எனக்கு நேரமும், சக்தியும் இல்லை. ஆண்டவரின் (values) மதிப்பீட்டின்படி மாத்திரம் பெண்ணைத் தெரிந்தெடுக்கும்படி தீர்மானித்திருந்த நாங்கள் ஒருபோதும் ஒரு பெண்ணைப் போய்ப் பார்த்து விட்டு, அவளுக்கு ‘வேண்டாம்’ என்ற பதிலைக் கூற மாட்டோம் என்றும் உறுதியாகத் தீர்மானித்திருந்தோம். அதனால் ஜெபித்து முழங்காலிலிருந்து எழுந்து. என் மனைவி, மகனிடம் அந்தப் பெண் நம் குடும்பத்துடன் இணைவாள் என்று கூறினேன் ஒரு வாரங் கழித்து அவளுடைய குடும்பத்தார் எங்களை அவர்கள் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்கள் பெண் தேடுதலில் சில மாதங்கள் செலவழிந்தது. மொத்தத்தில் என் சுகத்திற்காக ஜெபிக்க வேண்டிய நேரம் இதனால் மேலும் குறைந்து விட்டது.
நோய் பரவுதல்:
CMC மருத்துவமனையில் என்னுடைய அடுத்த பரிசோதனைக்கான நாள் வந்தது மேலே சொல்லப்பட்ட என்னுடைய குடும்பத் தேவைகளின் நிமித்தம் கடந்த ஆறு மாதங்களில் என்னால் ஜெபத்தில் அதிக நேரத்தை செல்வழிக்கக் கூடாமலிருந்தது, வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு என்னுடன் யாரையும் நான் அழைத்துச் செல்லவில்லை. அண்மையில் நடந்த இடுப்பு ஆப்பரேஷன் காரணமாக எனது மனைவியும் உடன் வர இயலவில்லை நான் தனிமையாகச் சென்று, மருத்துவமனை இல்லத்தில் தங்கினேன். மறுநாளில் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது.
நண்பகலில் டாக்டரை நான் சந்தித்தேன். என்னுடைய சி.டி.ஸ்கேனைப் பார்த்தவரால், அவரது கவலையை மறைக்க இயலவில்லை. புற்றுநோய் என்னுடைய ஈரலுக்குப் பரவி விட்டது என்பதை வெளிப்படையாகக் கூறினார். அத்துறைக்குத் தலைமையாயிருந்த, டாக்டரை அழைத்தார். இரு மருத்துவர்களும் ஸ்கேனை ஆராய்ந்து , அதே அபிப்பிராயத்தை சொன்னார்கள். என்னுடைய டாக்டர் பக்தியுள்ள கிறிஸ்தவர். அதே வேளையில் மிக வெளிப்படையாகப் பேசினார். அறுவை சிகிச்சை செய்தாலும், செய்யாவிட்டாலும் குறுகிய காலத்திற்கு மாத்திரமே நான் உயிரோடு இருக்கப் போவதால், அறுவை சிகிச்சை செய்து உபத்திரவப்படுத்துவது உகந்ததல்ல என்று கூறினார்.
Page 7
இதைக் கேட்டதும், என்னுடைய அநேக ஆண்டு ஆவிக்குரிய நண்பரும், மூத்த தேவஊழியருமான சகோதரன் எசேக்கியா ப்ரான்சிஸ் உடன் தொலைபேசியில் பேசினேன் அவர் எனக்காக ஜெபித்தார் எனினும் பயம் என்னை மேற்கொண்டது. மரணத்தைப் பற்றி அல்ல நோயைப் பற்றி. சில ஆயிரம் நோயாளிகள் நடமாடும் அந்த மருத்துவமனையில் நான் தாங்கொண்ணா தனிமையை உணர்ந்தேன் என் வாழ்நாள் முழுவதிலும் அதைப் போன்றதோர் உணர்வை நான் அனுபவித்ததேயில்லை.
அன்றிரவு unreserved பாசஞ்சர் இரயிலில் நான் வீடு திரும்பினேன். சென்னை வந்து சேர நீண்ட நேரமாயிற்று வழிநெடுக தன்னந்தனியாக கவலைப்படுவதற்கு நல்ல வாய்ப்பு. நான் பெப்ரவரி மாதத்தில் எனக்கு ஈரல் (Liver) அறுவை சிகிச்சை செய்வதற்கான ஒரு தேதியைத் தரும்படி டாக்டர்களை வருந்திக் கேட்டேன் அவர்கள் தயங்கியவாறே ஒத்துக்கொண்டனர் என்னுடைய டாக்டர் (நான் கேட்காமலேயே) என்னுடைய ஈரலில் நோய் பரவியதை காட்டும் குறுந்தகடு (C.D] ஒன்றைக் கொடுத்தார்.
என் வீட்டை நான் அடைந்ததும், அதிவிரைவில் மகன் திருமணத்தை நடத்த வேண்டுமென்றும், என் மனைவியின் இடுப்பு ஆபரேஷன் நிமித்தம் தற்போதுள்ள இரண்டாம் மாடி வாடகை வீட்டை மாற்றி ஏதேனும் கீழ்த்தளத்திலுள்ள வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றும் தீர்மானித்தேன்.
——————-
யாத் 15:26 “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன், நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.”
சங் 30:2 “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் என்னை நீர் குணமாக்கினீர்
Page 8
வேத வசனப் பயிற்சி:
ஓர் முக்கிய சம்பவம் நிகழந்தது. சென்னையில் நடந்த தெய்வீக சுகம் பற்றிய ஓர் சிறிய கருத்தரங்கில் (seminar) நான் கலந்து கொண்டேன் அங்கு பேசிய சகோதரன் ஜோ துரை எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர். அவர் விளம்பரத்தை சுத்தமாக தவிர்ப்பதால் இன்றும் பலருக்கு அவரைத் தெரியாது சுமார் 20 பேர் அடங்கிய கூட்டத்தில் அவர் அளித்த போதனைகள் என் மனதையும். என் ஆவியையும் மிக வல்லமையாக தொட்டது. அவருடைய போதனையின் மையம் தேவனுடைய வசனத்தையும், அதற்குக் கீழ்ப்படிதல் பற்றியதாகும் அந்தக் கருத்தரங்கில் கற்றுக் கொண்டதை கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். ஆறு மணி நேரம் கேட்கக் கூடிய அளவில் சகோதரர்கள் ஜோ துரை, சாம் ஜெபத்துரை, எசேக்கியா பிரான்சிஸ், ஜேசுதாஸ். மற்றும் இதர ஊழியரின் புத்தகங்களிலிருந்து சுகமாதல் பற்றிய வேதவசனங்களைத் தொகுத்து டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து, ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் அவைகளைக் கேட்டு வந்தேன். நான் அதிகம் புத்தகங்களைப் படிக்கிறவன் இப்பழக்கம் நான் வகித்து வந்த என்னுடைய பொறுப்பினால் மட்டுமல்ல, நானே சில புத்தகங்களை எழுதியவன் ஆனால், ஜனவரி முதல் பெரும்பான்மையான என்னுடைய புத்தகம் வாசிக்கும் நேரமானது, வசனத்தைக் கேட்கும் நேரமாயிற்று ரெக்கார்டிங் செய்யப்பட்ட தேவனுடைய வாக்குகளை அதிகமாக நான் கேட்க கேட்க என்னுடைய சிந்தை என்னுடைய அறிவிலிருந்து (intellect) ஆவிக்கு (spirit) மெதுவாக மாறுவதை உணர்ந்தேன்.
நான் மாதத்தில் 3 நாட்கள் தனிமையிலிருந்து, ஜெபித்து, தேவனுடைய வாக்குகளைத் தியானிக்கும் பழக்கத்தை ஆரம்பித்தேன். மகாபலிபுரத்திலுள்ள (Scripture Union) வேதாகம ஐக்கிய சங்கத்தின் இடம் நான் தவறாமல் செல்லும் தனியிடமாயிற்று. இது என்னுடைய வாழ்வைக் குறித்து சிந்திப்பதற்கும், என்னுடைய குறைகள், பிழைகள், தவறான தீர்மானங்கள், சுயவிருப்பங்கள் போன்றவற்றை அறிக்கையிடுவதற்கும் பெரிதும் உதவிற்று அந்நாட்களில் தேவனிடம் தவறிழைத்தோரிடம் சரிபொருந்துவதும் வாழ்க்கையின் ஓர் அங்கமாய் மாறிற்று.
Page 9
மீண்டும் ஆஸ்பத்திரிக்கு:
பெப்ரவரியில் நான் மீண்டும் வேலூருக்குச் செல்லும் நாள் வந்தது. CMC-யில் என்னுடைய ஈரல் ஆபரேஷனுக்காக Operation ward-இல் அட்மிஷன் ஒழுங்கு செய்து விட்டார்கள்.
நான் வேலூருக்குப் புறப்படுவதற்கு முன்னர் பெராக்கா சபை பாஸ்டர் ஜெயசீலன் எனக்காக ஜெபத்தை ஒழுங்கு செய்திருந்தார் ஏறக்குறைய முழு சபையாரும், சிலர் குழந்தைகளுடன் இரவு ஜெபத்திற்காக வந்திருந்தார்கள் அவர்களுடைய அன்பினாலும், ஜெப ஊக்கத்தினாலும் நான் ஆழமாகத் தொடப்பட்டேன் சகோதரன் எசேக்கியா பிரான்சிஸ் ஜெபத்தை நடத்தினார். கர்த்தர் சுகத்திற்காக இடைபடுவதற்கான அடையாளத்தைக் காண்பிக்கும்படி அவர் ஆண்டவரை நோக்கி ஜெபித்தார்.
நான் மீண்டும் தனிமையாகவே வேலூருக்குச் சென்றேன் என்னுடைய ஈரல் ஆபரேஷனுக்கு முந்தின நாள் என் மனைவியும், மகனும் வேலூர் வருவது எங்களின் திட்டம். அன்று மாலை வேலூரிலுள்ள பாஸ்டர் நெகெமியா சபையில் நடைபெற்ற ஜெபத்தில் கலந்து கொண்டேன். அவர் நியாயாதிபதிகள் 6:23-ஆம் வசனத்தைக் கொடுத்தார்
எனக்கு ஈரல் ஆப்பரேஷன் செய்யப்படுவதற்கு முன்பாக சி.டி.ஸ்கேன் எடுக்க டாக்டரிடம் கூறினேன் ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்கிடையே உள்ள ஒரு மாத இடைவெளியில் நோயின் வளர்ச்சியை அளவிடுவது இயலாது என்பது அவர்களின் எண்ணம் எனினும் என்னுடைய வற்புறுத்தலின் பேரில் சி.டி.ஸ்கேன் எடுக்க அவர்கள் சம்மதித்தார்கள். சி.டி.ஸ்கேன் எடுப்பதற்குக் காத்திருக்கும் அறையில் இரண்டு சகோதரிகள் என்னருகிலிருந்து, மௌனமாக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அன்று பிற்பகலில் என்னுடைய மருத்துவரைப் பார்க்கும்படி சென்றேன். ஆனால் அவர் வேறு பணியின் காரணமாக நாகாலாந்து சென்றிருந்தார். துறைத்தலைவர் MBBS தேர்வை நடத்தும்படி வெளியே சென்றிருந்தார். எனவே அவருக்குக் கீழ் இருந்த டாக்டரை சந்தித்தேன் . அவர் என்னுடைய புதிய சி.டி.ஸகேனை பார்த்து விட்டு. MRI எடுக்கும்படி அனுப்பினார்.
Page 10
இரண்டையும் ஆய்வு செய்த அவர் உங்கள் ஈரலிலுள்ள நோயின் அளவு ஜனவரி ஸ்கேனுக்குப் பின் பெரிதாகவில்லை ஆனால் வித்தியாசத்தை காண்பதற்கு ஒருமாதம் மிகக் குறுகிய காலம் இரண்டாவதாக, அதன் நிறத்தில் வித்தியாசம் உள்ளது. ஆதலால், 3 மாதம் கழித்து வாருங்கள். வளர்ச்சியைக் காண்பதற்கு அது போதுமான காலம் என்றார்.
தியானப் பயிற்சி:
நான் மீண்டும் வேலூருக்குப் போக வேண்டிய நாள் சமீபித்தது. ஆகவே, என்னுடைய ஜெபதியானத்திற்காக மகாபலிபுரம் சென்றேன். என்னுடைய கவலையும், பயமும் மிக அதிகமானது பெருகிய கவலையின் மத்தியில், தேவனை ஆராதிப்பதிலும், விசுவாசத்தை அறிக்கை செய்வதிலும் மூன்று நாட்களைச் செலவழித்தேன். ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காலை 8:15 மணியளவில், நீண்டதூரம் கடற்கரையில் நடந்து, விசுவாச அறிக்கையுடன் தொழுது வரும்பொழுது 2கொரிந்தியர் 6:2, ஏசாயா 49:8-இல் சொல்லப்பட்டுள்ள “இன்றே அனுக்கிரக காலம்” என்பது எனது டேப்ரெக்கார்டரில் (Walkman) வந்தது. உடனே என் உள்ளத்தில் வலிமையான நிச்சயம் உண்டாயிற்று. உடனே கடற்கரை மணலில் நான் மண்டியிட்டு, தேவனை தொழுதேன் நான் என்னுடைய அறைக்கு வந்து, நீண்ட நேரம் கர்த்தரைத் தொழுது கொண்டிருந்தேன். நான் என் வீட்டுக்கு போன்செய்து, என்னுடைய மருமகள் எஸ்தருக்கு ‘அனு’ (கர்த்தரின் அனுக்கிரகம்) என்று பெயரிட்டேன்.
நாங்கள் வேலூர் CMC அடைந்தோம். என் மனைவியும், நானும் நடு இரவு வரை ஜெபித்தோம். நடு இரவு சுமார் 12 மணி அளவில் ஜெபம் பண்ணுகையில் அருள் நாதர் இயேசு ஜெபம் பண்ணுவதைக் கண்டேன் கனவா, தரிசனமா எனப்பிரித்துக் கூற முடியவில்லை அருள் நாதர் கெத்சேமனே தோட்டத்தில் மண்டியிட்டு ஜெபித்தது போன்ற காட்சி. நீசன் எனக்காய் ஆண்டவர் மண்டியிட்டு ஜெபிக்கிறார் என்ற உணர்வு வந்தவுடன் கட்டிலில் உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்த நான் உடனடியாக குதித்தெழுந்து, மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். நன்றி செலுத்தினேன். பின்பு இருவரும் தூங்கி விட்டோம்.
Page 11
அந்த நாள் வந்தது:
ஆரம்பத்தில் என்னுடைய நோய் ஈரலுக்குப் பரவியதைக் கண்டுபிடித்த பெரிய டாக்டரை நான் சந்தித்தேன் என்னுடைய அறிக்கையைப் பார்த்து விட்டு அவர் குழப்பமடைந்தவரைப் போலிருந்தார் அவர் ஸ்கேன் துறைக்குத் போன் மூலம் பேசினார். அவருடைய சொந்த கம்ப்யூட்டரில் பார்த்ததோடு திருப்தியடையவில்லை. ஸ்கேன் துறையிலிருந்து நேரிடையான ரிபோர்ட் கேட்டார். மாலை 4 மணிக்கு அவரை சந்திக்கும்படி என்னிடம் கூறினார்.
நான் மாலை 4 மணிக்கு அவரை சந்தித்தேன். அவர் என்னிடம் “ஈரலில் அல்லது மற்ற எந்தப் பகுதியிலும் நோய் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று கூறினார்.
நான் அவரிடம், “டாக்டர், உங்களுடைய வாயிலிருந்து வந்த நல்ல வாக்குக்காக ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். நான் ஒரு இயேசு பக்தன். இரண்டு வாரங்களுக்கு முன் இயேசுநாதர் என் மீது அனுக்கிரகம் செய்து விட்டதாக சொல்லி விட்டார்” என்றேன், அவர் ஒரு வைதீக இந்து டாக்டர். அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார் “இயேசுநாதர் அனுக்கிரகம் செய்தபின், கூடுதலாக நான் என்ன செய்யக் கூடும்” என்றார்.
ஆண்டவர் சுகம் கொடுத்தால் தெய்வீக சுகம் பற்றி கைப்பிரதி விநியோகிப்பதற்காக 500 பிரதிகள் அச்சிட்டு வைத்திருந்தேன். நான் அவற்றை நோயாளிகளுக்கு விநியோகித்தேன்.
எனது தீர்மானம்:
எந்த நோக்கத்திற்காகக் கர்த்தர் உயிர் பிச்சை அளித்தார் என்பதை அறியவும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற திட்டமிடவும் இரண்டு நாட்களை செலவழித்தேன் தம்முடைய சுத்த இரக்கத்தினால் ஆண்டவர் என்னைப் பாதுகாத்து வருகிறார். அவருடைய பொற்பாதங்களுக்கு ஆயிரம் கோடி ஸ்தோத்திரம்.
——————-
நியா.6:23 உனக்கு சமாதானம் பயப்படாதே. நீ சாவதில்லை என்று கர்த்தர் சென்னார்’.
ஏசா 53:5 ‘அவருடைய காயங்களால் நாம் சுகமாகிறோம்
2கொரி 6:2 ‘இப்பொழுதே அனுக்கிரக காலம் இப்பொழுதே இரட்சணிய நாள்’
Page 12
முன் அறிவிப்பு:
என்னுடைய 64th பிறந்த நாளில் வீட்டில் கொடுக்கப்பட்ட வசனம் ஏசாயா 44:8. ‘’நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள், அக்கால முதற்கொண்டு நான் அதை உனக்கு முன்னறிவித்தது இல்லயோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிற தேவனுண்டோ?’ இந்த அருள்வாக்கை வாசித்த பின்னரே 20 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைவுகூர்ந்தேன் அப்பொழுது நான் நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவில் களப்பணி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வட இந்தியாவிலிருந்து வேலையின் நிமித்தமாக நான் சென்னைக்கு வந்திருந்தேன் என்னுடைய சுகத்திற்காக அல்ல என்னுடைய ஊழியத்தின் வழிநடத்துதலுக்காக (guidance) ஜெபிக்கும்படி நான் சகோதரன் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களிடம் சென்றிருந்தேன். ஆனால் அவர் எனக்காக ஜெபித்து விட்டு, என்னுடைய சிறுநீரகத்தில் ஏதோ ஒன்றை ஆண்டவர் சுகமாக்கி விட்டார் என்று முன்னறிவித்தார். அப்பொழுது நான் நல்ல சுகமுள்ளவனாக இருந்தபடியால் எனக்குள்ளே ஆச்சரியப்பட்டேன். அவருடைய முன்னறிவிப்பு எத்தனை உண்மையாகி விட்டது! துதி கனம் மகிமை எல்லாம் நீசன் என்னை முன் குறித்து மீட்ட அருள் நாதர் இயேசுவுக்கே.
கற்றுக்கொண்ட பாடங்கள்:
வாழ்க்கையின் எந்தவொரு நிகழ்விலும் நாம் அடையும் அனுபவமல்ல, அந்த அனுபவத்தின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களே அதிமுக்கியமான அம்சமாகும். அனுபவங்கள் நபருக்கு நபர் வேறுபடாலாம். பாடங்களோ வேறுபடாது.
அருள் (கிருபை): என்னை சந்திக்கும் அநேகர் நான் இன்னமும் எப்படி உயிர் வாழ்கிறேன் என வியப்புறுகின்றனர். அவர்களுக்கு நான் அளிக்கும் பதில், “தேவ கிருபை” “ஆண்டவர் அருள்” என்னும் இரு-வார்த்தைகளே என்னுடைய அனுபவத்தை விளக்க வேறேதுமில்லை “அப்படியானால், ஏன் தேவ கிருபை ஒவ்வொருவரின் விஷயத்திலும் சமமாக செயல்வடுவதில்லை “ என்ற உடனடியான கேள்வி என்னுடைய வாசகரின் மனதில் எழக்கூடும். ஏன் தேவன் சிலருக்கு மட்டும் இவ்விதம் செய்கிறார்?
Page 13
இக்கேள்விக்கான முழுமையான பதில் என்னிடமில்லை. அருளை / கிருபையை ஓர் தத்துவ விதிக்குள் அடக்கக்கூடுமானால் அது அருள் அல்ல இருப்பினும் ஒரு சிறு பதில் என்னிடமுண்டு அது தீத்து 2:11,12-இல் சொல்லப்பட்டுள்ளது. “எல்லா மனிதருக்கும் மீட்பை அளிக்கத்தக்க தேவஅருள் பிரசன்னமாகி நாம் அவபக்திக்கும். உலக இச்சைகளுக்கும் விலக தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே வாழும்படி நமக்குப் போதிக்கிறது.” தெய்வீக அருளின் நோக்கத்தையும் தெய்வீக அருள் மனிதனிடம் எதை எதர்பார்க்கிறது என்பதையும் இந்த வசனம் விளக்குகிறது.
2005 ஆம் ஆண்டில் பெங்களூரில் ஒரு சுகமளிக்கும் கூட்டத்தை பெரிய மைதானத்தில் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஓர் பள்ளிப் பருவ பெண் மேடைக்கு வந்து, வியாதியிலிருந்து ஆண்டவர் இயேசு தன்னை எவ்விதம் குணமாக்கினார் என்பதைக் கண்ணீருடன் சாட்சி பகர்ந்தாள் கள்ளங் கபடற்றக் குழந்தையைப் போல ஊழியக்காரரை நோக்கி. “நான் ஒரு இந்து. இயேசு ஏன் என்னைக் குணமாக்கினார்” என்று வினவினாள். இதைக் கேட்ட அநேகர் கண் கலங்கியது ஜாதி, மதம், தரம் பார்க்காத அதுவே கிருபை/அருள். ஆனால் அருள் பெற்றவன் கொடுத்தவனை மறந்துவிடக்கூடாது. மறந்தால் அருள் பெற்றவனுக்கு கஷ்டம்/நஷ்டம் வரும். அருள் கொடுத்தவனுக்கு நஷ்டம் இல்லை அருளுக்கு ஜாதிமத பேதம் கிடையாது. ஆனால் மேலே கண்ட பெண் அவள் சுகமடைந்த பின்னர் ஆண்டவரின் போதனைகளை தியானிக்க வேண்டும் என்பது அருளின் எதிர்பார்ப்பாகும் நோயாளி ஏற்கெனவே விசுவாசியாக இருந்தால் சுகம் பெற்றபின் ஆண்டவருடைய போதனைகளுக்கு இன்னும் இரட்டிப்பான அளவில் கீழ்ப்படிய வேண்டும் என்று அருள் அவனிடம் எதிர்பார்க்கிறது
சுருங்கக் கூறின், நான் நோயுற்ற காலத்தில் கற்றுக்கொண்ட முதல் பாடம் யாதெனில் நான் எப்போதும் கிருபையைத் தியானிக்க வேண்டும் என்பதாகும். அருள் பெற்றவன் பெற்ற அருளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நமது இந்திய பக்தி வழியில் நம்முடைய தொழுகை அனைத்தும் கடவுளின் கிருபை அருள் என்ற இந்த ஒரே பண்பையே மையங் கொண்டுள்ளது. ஆண்டவரின் அருளைப் பற்றி வாசியுங்கள், பாடுங்கள், பேசுங்கள், தியானியுங்கள். அப்பொழுது, மெல்ல மெல்ல ஆவிக்குரிய உலகம் (spiritual world) உங்களுக்கு உணமைப் பொருளாகும்.
Page 14
நீங்கள் பிறருக்கு அருளையும், இரக்கத்தையும் காண்பிக்கத் துவங்குவீர்கள். அதன் பின்னர், சுகம் உங்கள் மேல் வந்திறங்கும்.
இந்து சகோதரர்கள் எப்படி இயேசு நாதரின் அருளை தியானிப்பது? அறியாத தெய்வத்தை எப்படித் தொழுவது? “என்னைக் கூப்பிடு, நான் பதில் கொடுப்பேன்” “என்னை சோதித்துப்பார்” (சங்கீதம் 34:8) என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவரை யாரும் கூப்பிடலாம். யாரும் தொழுது கொள்ளலாம். முதலில் அறியாத அவரை மனதில் தொழுக, தொழுக அவர் அறிந்த, அறியக்கூடிய தெய்வம் ஆகின்றார்.
இயேசு என்ற பெயருக்கு ‘மீட்பவர்’ என்று அர்த்தம். அவர் உலக மீட்பர். கிறிஸ்தவரின் மீட்பர் அல்ல. எந்த ஜாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்லவன், கெட்டவன் என்று பார்ப்பவரல்ல. அனைவர் வேண்டுதலையும் அவர் கேட்பார். பதில் அளிப்பார்.
ஆண்டவரின் வாக்குகள்:
கலாத்தியர் 3:14இல் எழுதியபடி “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் சகல மக்களுக்கும் வரும்படியாகவும், வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினால் பெறும்படியாகவும் இப்படியாயிற்று”
சிலுவையில் தன்னையே பலி கொடுத்ததினால் இயேசு (உபாகமம் 28-இல் கூறப்பட்டுள்ள) மாற்ற முடியாத சாபங்கள் அனைத்தையும் நீக்குகிறார். சிலுவையினால் உண்டாகும் முதல் ஆசீர்வாதம், நமது ஆவிக்குரிய மீட்பு (spiritual redemption). அடுத்ததாக சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்கள்.
Page 15
பரிசுத்த வேதாகமம் முழுவதிலுமிருந்து பொறுக்கி எடுத்த வாக்குத்தத்தங்கள், கட்டளைகள், ஆசிர்வாதங்கள் சுகமாக்குதல்கள் ஆகியவற்றை நான் டேப்ரெக்கார்டரில் பதிவு செய்தேன். ஆறு மணி நேரம் கேட்கக்கூடியவற்றை நானே பதிவு செய்து, அவற்றை நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் கேட்பதுண்டு. தேவனுடைய வார்த்தையானது இடம், காலம் ஆகியவற்றைக் கடந்து வேலை செய்கிறது என்பதையும், கர்த்தருடைய வாக்கினால் உண்டாகும் சுகம் கடவுளின் பக்தருக்கு என்பதையும் நான் நம்புவதற்குத் தேவையான விசுவாசத்தை மெல்ல மெல்ல அந்த அருள் வாக்குகள் எனக்குள் உருவாக்கிற்று. “விசுவாசம் தேவ வசனத்தைக் கேட்பதினாலே வரும்” (ரோமர் 10:17)
வேத வசனத்தின் மூலம் பேசுகின்றாரே தவிர ஏன் தேவன் நேரிடையாக என் காதுகளில் அல்லது ஆவியில் பேசுவதில்லை? சில வேளைகளில் அவர் அவ்விதம் செய்யலாம். ஆனால், பெரும்பாலும் அவ்விதம் செய்வதில்லை ஏன்? தேவன் எப்பொழுதும் நேரிடையாக ஒவ்வொரு மனிதனின் காதுகளிலும் பேசுவாரானால், நாம் வேதத்தை வாசிப்பதை நிறுத்தி விடுவோம். ஒவ்வொரு மனிதனும் அவன் கேட்க விரும்புவதையே செவியில் “கேட்க” ஆரம்பிப்பான். எனவேதான் தேவன் பெரும்பாலும் வேதத்தின் மூலமே நமது சிந்தையில் பேசுகிறார் ஆனால் ஒவ்வொரு நபரின் குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப தனது அருள் வாக்கை உள்ளத்தில் உணர்த்துவார்.
தங்களுடைய சுய சத்தத்திலிருந்து ஆவியின் சத்தத்தைப் பகுத்தறியக் கூடிய முதிர்ச்சியடைந்த பலர் காதுகளில் அல்லது மனதில் இன்றைக்கும் தேவன் நேரிடையாகப் பேசுகிறார் அற்பனாகிய நானும் இதைக் கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்கலாம்.
சுருங்கக்கூறின் கடவுளின் அருள்வாக்குகள், நாம் இவ்வுலக ஆசீர்வாதங்களை அல்லது சுகத்தை அல்லது பாதுகாப்பை வேண்டிப் பெற்றுக்கொள்வதற்கான கருவிகள் மட்டும் அல்ல. நம் வாழ்வில் நாம் தேவனின் சுபாவம், அவருடைய தூய்மை, நீதி, இரக்கம், அருள், வல்லமை, தாழ்மை, அன்பு ஆகியவற்றை அடையும்படி நம்மை மறுரூபமாக்குவதே அருள் வாக்குகளின் (பரிசுத்த வேதத்தின்) முடிவான நோக்கம்.
Page 16
சுருங்க சொன்னால், நாம் சுகத்தை பெறும் முன்னரோ அல்லது பெற்ற பின்னரோ நாம் கர்த்தரின் வார்த்தையின்படியே கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதற்காக, கர்த்தர் தம்முடைய வார்த்தையின்படியே சுகத்தை அளிக்கின்றார். இதற்குப் பெயர்தான் ‘விசுவாசம்’
(God trains us to except Him to act according to His holy word so that God can expect us to act according to his holy word, before or after we receive its physical blessings. This is what is called faithfulness of God and faithfulness of man.)
கர்த்தரின் மன்னிப்பு:
இயேசு நாதர் சொல்லித்தந்த ஜெபம், நாம் செய்யும் ஜெபங்கள் அனைத்திலும் தலை சிறந்தது. அதில் ஒரு வரி, “மற்றவர்களுடைய குற்றங்களை நாங்கள் அவர்களுக்கு மன்னிக்கிறதுபோல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்” என்பதாகும். இது மிகவும் விநோதமான சொல். இதில் “என்னுடைய குற்றத்தை எனக்கு மன்னியும், ஏனென்றால், நான் எவ்வளவோ பரவாயில்லை” என்றோ, அல்லது “எனக்கு இன்னும் ஒரே ஒரு தருணம் தாரும்” என்றோ, அல்லது “தயவுசெய்து என்னுடைய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும்” என்றோ சொல்லப்படவில்லை ஆண்டவர் என் குற்றங்களை மன்னிக்க ஒரே ஒரு நிபந்தனை நான் மற்றவனை மன்னிக்க வேண்டும்.
நான் ஒரு மனிதனை மன்னிக்கும்பொழுது அவனை மனித நீதியினால் மூடுகிறேன். அதற்கு பதிலாக, ஆண்டவர் என்னை மன்னிக்கும்பொழுது அவர் என்னை தெய்வீக நீதியினால் மூடுகிறார். மனித நீதி காணக் கூடியது தெய்வீக நீதியோ காணக் கூடாதது. அது தேவனுக்கும், அவருடைய தூதருக்கும், பிசாசுக்கும் மாத்திரமே காணக் கூடியதாகும். தெய்வீக நீதியினால் மூடப்பட்ட நபரைத் தொடுவதற்குப் பிசாசு பயப்படுகிறான் (மல்கியா 42) தேவமன்னிப்பைப் பெற்ற ஒருவனை (அவன் குறை உள்ளவனாய் இருந்தாலும் கூட) பிசாசு தொட முடியாது (சகரியா 2:8. உபா 32:10, ரோமர் 8.33)
Page 17
ஆனால், ஓர் கேள்வி, எனக்கு அல்லது என் குடும்பத்திற்கு அல்லது என் சபைக்கு அல்லது என் பணியிடத்திற்கு மிகுதியாகப் பிரச்சினை உண்டாக்கும் ஓர் மனிதனை நான் தொடர்ந்து மன்னித்துக் கொண்டிருந்தால் அவன் எப்படி எப்பொழுது மனந்திரும்புவான்? என்னுடைய முழு குடும்பத்தை அல்லது சபையை அல்லது நிறுவனத்தை அவர் அழித்து விடமாட்டாரோ? ஆம். நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகாவிட்டால் அவன் அழிப்பான் குடும்பமானால் குடும்பத் தலைவர்களுக்கும், சபையானால் சபை தலைவர்களுக்கும், நிறுவனமானால் அதன் தலைவர்களுக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும். அதாவது தவறு செய்கிறவன் மேல் அதிகாரமும், பொறுப்பும் உடையவரிடம் மட்டும் முழுமையாகவும், நிறைவாகவும் விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டும். (அப்.6:1-4, 1 கொரி.6:1-7) அதன் பின்னர் ஜெபித்து, பதிலுக்காகக் காத்திருங்கள். முக்கியமாக அந்நபரை கர்த்தருடைய சீர்திருத்தலுக்கென்று ஒப்புக் கொடுங்கள் இத்துடன் உங்களுடைய முழுப் பொறுப்பும் முடிவடைவதுடன் அந்நபர் மேலுள்ள கசப்பும் அகன்று போகிறது. உங்கள் மனதில் கசப்பு இல்லாமல் இருப்பதே, நீங்கள் அவரை மன்னித்து விட்டீர் என்பதற்கான அடையாளமாகும்.
குற்றவாளி ஒருவன் மீது பாதிக்கப்பட்டவன் கேஸ் போட்டு நீதிமன்றத்திற்கு செல்லும்பொழுது, குற்றத்தை கண்டறிந்து. அவனைத் தண்டிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பாகும். இவ்விஷயம் நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது. பாதிக்கப்பட்டவன் குற்றவாளியைத் தாக்க கூடாது அவனை நிந்திக்கவோ, தன் வார்த்தையினால் அவதூறு பேசவோ கூடாது. இது “நீதிமன்ற அத்துமீறல் (Subjudice, Contempt) என்றழைக்கப்படுகிறது இதன் பொருள், நீதி வழங்க நீதிமன்றத்திற்குள்ள ஞானம், நேர்மை, ஆற்றலை அவமதிப்பு செய்தல் அல்லது அவநம்பிக்கை கொள்ளுதல் என்பதாகும்.
——————–
மல்கி 4:2 உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்”
லூக்11:13 “பரம தகப்பன், வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா”
சகரி 2:5 “உன்னைத் தொடுகிறவள் அவர் கண்மணியைத் தொடுகிறான்”
உபா 32:10 “அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்”
ரோம 8:33 “தேவன் தெரிந்து கொண்டவன் மேல் குற்றம் சாட்டுகிறவன் யார்”
Page 18
இதைப்போன்றே எனக்குக் குற்றமிழைத்தவனை நான் தேவனுடைய நீதிமன்றத்தில் கையளித்தபின் நீதிக்காகக் காத்திராமல், என் வாயினால் அல்லது கைகளினால் தாக்கினால், நான் தேவனுடைய நீதிமன்றத்தை, அவர் ஞானத்தை, நீதி வழங்கும் திறனை அவமதித்தவன் ஆவேன். இது கர்த்தருடைய நீதிமன்றத்தின் மீது அவமதிப்பு ஆகும். இது மோசமான குற்றமாகும். கர்த்தர் நிச்சயமாகவே நீதி வழங்குகிறார். ஆனால், தேவன் நான் எதிர்பார்க்கும் வேகத்தில் அல்லது வழியில் அல்லது முறையில் அல்லது அளவில் நீதி வழங்குவதில்லை. அவர் என்னைவிட மிகுந்த ஞானமுள்ளவர். அவர் எல்லோருக்கும் நன்மையானதை சரியாக அறிந்திருக்கிறார்.
தனக்கு துன்பம் கொடுக்கும் குடும்ப அங்கத்தினரை அல்லது உடன் ஊழியரை அல்லது பகைஞரை மன்னித்த அவ்வேளையில் உடனே சுகம் பெற்றேன் என்று பலர் சாட்சி சொன்னதை நான் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். சுகமாக்குபவர்/பிரசங்கியார் /போதகர் யாரும் இல்லாமலேயே இந்த சுகமாகுதல் நடைபெறுகிறது. ஒருவன் ஆண்டவரின் நீதிமன்றத்தைக் கனப்படுத்தினால், அந்த நீதிமன்றம் அவனுக்கு சுகத்தைக் (order) கட்டளையிடுகிறது.
தேவனுடைய தாழ்மை:
சாத்தான் சாத்தானாக மாறியதின் காரணம் அவன் கெட்ட சினிமா பார்த்ததாலோ அல்லது குடிப்பழக்கத்தினாலோ அல்லது அடிதடி கொலை செய்ததினாலோ அல்ல. அவன் பெருமை ஆனதே காரணம் (ஏசா 1412-14)
ஆதலால், பாவங்களில் மிகப் பெரியது பெருமையே. ஒருவேளை பெருமை தவிர மற்றெல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படக் கூடியவை ஏனெனில், ஒருவன் அவைகளுக்காக மனந்திரும்பக் கூடும். பெருமை உள்ளவன் மனந்திரும்ப முடியாது. பெருமை மனந்திரும்பக் கூடாததாயிருக்கிறபடியால் பெருமை மன்னிக்கப்பட முடியாத பாவமாயிருக்கிறது.
கம்பிரமாக உணர்வது எப்பொழுது? சரிசமமாக உணர்வது எப்பொழுது? தாழ்மையை உணர்வது எப்பொழுது? அநேகர் இந்த மூன்றையும் கலந்து குழம்பி விடுகின்றனர்.
Page 19
முதலாவதாக, நாம் தேவசமுகத்தில் நம்மை நாமே முற்றிலும் தாழ்த்த வேண்டும். (ஏசாயா 6:5, வெளிப்படுத்தல் 1:17 வாசிக்கவும்.) இயேசு நமது மூத்த சகோதரனாகவும், பரிசுத்த ஆவியானவர் நமது துணையாகவும் நம்முள் தங்கியிருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் இருவரும் திரியேக தேவனின் அங்கமாக இருக்கிறார்கள். எனவே, நாம் அவர்களோடு மிக ஆழமான அன்போடும் (மாற்கு 12:30). ஆழமான மரியாதையுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும் (வெளி 5.12).
இரண்டாவதாக. விசுவாசிகள், எளியவர், நலிந்தோர் மத்தியில் நாம் பழகும்போது அனைவரும் சமம் என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும். சின்னஞ்சிறு உடன்பிறப்புகள் தங்களுக்குள் சிறுசிறு சண்டையிடுவார்கள். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆணவங்கொள்வதில்லலை அல்லது ஒருவரோடொருவர் தங்களை ஒப்பிடுவதில்லை ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒரே தகப்பனின் பிள்ளைகள். சபையில் ஒருவரும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று எண்ணவோ, அவ்விதம் நடக்கவோ இடமளிக்க கூடாது. இவ்விதம் நேரிடுமானால் அது தேவனுடைய சபையல்ல, அது சந்தைக்கடை. தேவன்பேரில் நான் வைக்கும் அன்பின் அளவு. தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நான் சரிசமமாக நடத்துகிற அளவு.
மூன்றாவதாக, எப்பொழுது நாம் பெருமிதமாக. தைரியமாக இருப்பது? நேர்மையான விசுவாசி ஒவ்வொருவரும் பிசாசின் முன்னிலையில் பெருமிதமாக தைரியமாக இருக்க வேண்டும். (ஆண்டவரால் அருளப்பட்ட) நமது கம்பிரம் அதிகாரம்,
——————-
எபி. 12:6 “தகப்பன் சிட்சியாத பிள்ளை உண்டோ?”
நீதி3:12 “தகப்பன் தான் நேசிக்கிற பிள்ளையை சிட்சிக்கிறான்”
நீதி 25:21 “உன் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு சாப்பாடு கொடு, அதினால் நீ அவன் தலைமேல் எரிகிற தழலைக் குவிப்பாய். கர்த்தர் உனக்கு பலன் அளிப்பார்.”
ஏசா 14:12-14 விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே. நான் வானத்திற்கு ஏறுவேன் தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ சொன்னாயே நீ பாதாளத்தில் தள்ளுண்டு போனாய்”
மீகா 6:8 “நியாயம் செய்து, இரக்கத்தை சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறு என்னத்தை கர்த்தர் கேட்கிறார்?”
மத் 11:29 “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்”
Page 20
வல்லமை அனைத்தையும் நாம் பிசாசுக்கு முன்னால் வெளிப்படுத்த வேண்டும். மீட்பரின் இரத்தத்தினால் தேவனுடைய குமாரர்களாகப்பட்ட நமக்கு அருளப்பட்டுள்ள ஆளுமை அதிகாரம் அனைத்தையும் நாம் அப்பியாசித்து, பிசாசை எப்பொழுதும் ஓடப் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும். மிகச் சிறிய அளவிலுங்கூட பிசாசுக்கு முன்பாக தாழ்வு மனப்பாங்கை அல்லது சந்தேகத்தை அல்லது பயத்தை நாம் காண்பிக்கவே கூடாது (ரோமர் 8:15-17, யாக் 4:7)
ஒரே ஒரு முக்கியமான நிபந்தனை பிசாசை அதட்டும் முன்பு, நாம் (பிசாசுக்கு முன்பாக அல்ல) தேவனுக்கு முன்பாக நமது இதயத்தை ஆராய்ந்து பார்த்து, சகல தவறுகளையும், சிறிய கீழ்ப்படியாமையையும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் மற்றவர்களை மன்னித்து, பிறரிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இதில் பூரணத்திற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. பரிசுத்தமும், நீதியும் ஆயுட்கால முழுவதும் வளருகிற வளர்ச்சியாகும் தாழ்மையோடு நடக்கும் (குறைவான) விசுவாசியையும் தேவனுடைய நீதியானது தொடர்ந்து மூடிக்கொள்ளுகிறது (மீகா6:8). தேவனோடு மனத்தாழ்மையோடு நடக்கும் விசுவாசியைக் காணும்பொழுது பிசாசு பயந்து நடுங்கி, பெலன் அற்றவனாகிறான். (2கொரி .10:4)
பரிசுத்தவான்களின் ஐக்கியம்
தேவன் தனித்தனியாக நபர்களை மீட்கிறார், ஆனால், கூட்டாக வளர்க்கிறார். தனித்தனியாக அல்ல ஆவியில் வளர ஒருவனுக்கு. மற்றவரின் ஐக்கியம் மிகத்தேவை. நான் யாரோடும் அண்டாத. “பரிசுத்தவான்” என்னும் நிலை பேய்த்தனத்துக்கு அடுத்ததாகும். “தேவனுடைய சத்தத்தினால்” மட்டும் நான் நடத்தப்படுகிறேன் எனக் கூறிக்கொண்டு விசுவாசிகளின் ஐக்கியத்தை, புத்தி சொல்லுதலை கவனியாதவன் வழி தவறி விட்டான்.
நான் வியாதிப்பட்டு சுகமடைந்த பிற்பாடு. நான் தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தில், குறிப்பாக என்னுடைய (divine healing) சுகத்திற்கு கண்காணிகளாக இருக்கும் முதிர்ச்சியடைந்த தலைவர்களின் ஐக்கியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டேன்.
Page 21
கிறிஸ்தவர்களிடையேயும் சிலர் தெய்வீக சுகத்தை விசுவாசிப்பதில்லை. அவர்கள் என் விசுவாசத்தை பாதிக்கக்கூடும். அதுபோல குடும்ப அங்கத்தினர் சிலர் விசுவாசிக்கவில்லை என்றால் அது என் விசுவாசத்தைப் பாதிக்கும். மேலே கூறப்பட்டுள்ள புத்திமதியை என்னால் இயன்ற மட்டும் பின்பற்ற நான் முயற்சிக்கிறேன் உங்களில் ஓர் உயர் நிலை அனுபவம் வேலை செய்ய ஆரம்பிக்கும்போது அதை விளங்க முடியாத மற்றவர்களின் அபிப்பிராயங்கள் நம்மை மட்டுப் படுத்த விடக்கூடாது. உறவும், அன்பும் நன்றாய் தொடரட்டும். ஆனால் உயரிய விசுவாசத்தை விட்டுவிடக் கூடாது.
சுகம்பெறுதல் Vs ஆரோக்கியம்
(DIVINE HEALING VS MAINTENANCE OF GOOD HEALTH)
பொதுவாக ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துவதின் விளைவே நோயாகும். உடலிலோ, உணர்ச்சியிலோ, உழைப்பிலோ, உணவிலோ, தனது சரீரத்தைப் பற்றி அக்கறை எடுக்காமலிருப்பதே மனிதனின் நோய்க்குக் காரணமாகும். சிலவேளை என் பொறுப்புக்கு அப்பாற்பட்டு நோய் வரக்கூடும். அப்போது தேவன் இடப்பட்டு, ஜெபத்துக்குப் பதில் அளிக்கிறார் சுகம் அளிக்கிறார். ஆனால் பொதுவாக, என்னுடைய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு தேவன் பொறுப்பு அல்ல. நானே பொறுப்பு.
——————–
ஏசா 6:5 “அப்பொழுது நான் ஐயோ! அதமானேன் நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.”
வெளி 1:17. “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல் அவருடைய பாதத்தில் விழுந்தேன். அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து என்னை நோக்கி பயப்படாதே. நான் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன்.”
மாற் 12:30 உன் தேவனாகிய கர்த்தாடத்தில் உன் முழு இருதயத்தோடும். உன் முழு ஆத்துமாவோடும். உன் முழு மனதோடும். உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.”
வெளி 5:12 “அவர்கள் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஜசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாதிரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.”
ரோமர் 8:15 “திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் ‘அப்பா என்று கூப்பிடுகிற பிள்ளையின் ஆவியைப் பெற்றீர்கள்”
யாக் 4:7 “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்
2 கொரி 10.4 “எங்களுடைய போர் ஆயுதங்கள் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலம் உள்ளவைகளாய் இருக்கிறது.”
Page 22
துரித உணவு (fast food) ஆரோக்கியமற்ற உணவு. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற நண்பர் குழாம், ஒழுக்கமற்ற வாழ்க்கை, ஆன்மீகமற்ற வாழ்க்கைமுறை ஆகியவை ஆரோக்கியக் கேடுண்டாக்குகின்றன.
இயற்கையான எளிய உணவு, அதிகமான குடிநீர் ஒழுங்கான உடற் பயிற்சி. அன்பான குடும்ப உறவு, அவசரமற்ற வாழ்க்கை, வாழ்க்கையில் உயர்வான எண்ணங்கள், மற்றவர்களை மன்னித்தல், எளியவர்க்கு உதவுதல், தியானம், ஆரோக்கியத்தை வளர்க்கும்.
மேற்கண்டவற்றை ஒருவர் கடைப்பிடித்தும், இன்னமும் பெரிய நோய் ஏற்பட்டால் அவர் தெய்வீகக் குறுக்கீட்டிற்கு உரிமையோடு வேண்டலாம். அருளுக்காக தேவனிடம் தைரியமாகக் கேட்கலாம்.
என்னுடைய 64 வயது வரை நான் மிகவும் சுகதேகியாக இருந்து வந்தேன் ஏனெனில், 53 வயது வரை நான் என் பிரயாணத்திற்காக சைக்கிளைத்தான் பயன்படுத்தினேன் 55 வயது வரை ஓட்டப்பயிற்சி (Jogging) செய்தேன். கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் எளிய இயற்கையான உணவையே உட்கொள்ளுகிறேன். வேறு எதிலோ தவறியதால் அல்லது அலட்சியப்படுத்தினதினால் 64-ஆம் வயதில் நோயுற்றேன்.
தெய்வீக சுகமும் VS மருத்துவ சுகமும்
(DIVINE HEALING VS MEDICAL HEALING)
இரண்டு மிதமிஞ்சிய கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, மருத்துவர்களையும் மருந்துகளையும் மாத்திரம் சார்ந்திருத்தல் மற்றொன்று சளிக்கும் இருமலுக்கும் கூட தெய்வீக சுகத்தை மாத்திரமே சார்ந்திருத்தல். சமநிலைக் கருத்து யாதெனில், மருந்தினாலோ அல்லது மருந்து இல்லாமலோ பெறும் ஒவ்வொரு சுகமாகுதலும் தேவனுடைய கிருபையினாலும், தேவன் கொடுத்த ஞானத்தினால் மாத்திரமே உண்டாகிறது. நம்முடைய ஆவிக்குரிய சுகத்திற்கு போதகர்கள் தேவஊழியர்களாக இருப்பதுபோல, நம்முடைய சரீர நலத்திற்குப் பணிவிடை செய்யும்படி மருத்துவர்கள் தேவஊழியர்களாக இருக்கிறார்கள். அநேகமாக இயற்கை வைத்தியம் அல்லது மிக எளிய மருந்துகளின் மூலம் தேவன் நம்மைக் குணமாக்குகிறார்.
Page 23
(இன்று பல மருத்துவமனைகள் வியாபார நோக்குடன் நடப்பது மிக மிக விசனமான காரியம்) மருத்துவம் இயலாதபொழுது, தேவன் நேரிடையாகக் குறுக்கிடுகிறார். ஏழைகளுக்கு எளிய மருத்துவ உதவிகள் கூட கிடைக்காமல் இருக்கும்பொழுது, அவர்களுடைய ஜெபத்திற்கு தேவனே இடைபட்டு சுகம் அளிக்கிறார். இருப்பினும், ஏழைகளின் உடல் நலத்திற்காக நாம் எப்போதும் அவர்களுக்குத் தாரளமாகக் கொடுக்க வேண்டும். நம்முடைய சொந்த மருத்துவச் செலவுகளுக்காக நாம் அதிகமாக செலவழித்து. ஏழைகளிடம், “கர்த்தர் உன்னைக் சுகமாக்குவார்” என்று கூறக் கூடாது. இது மாய்மாலம். நாம் அவர்களுக்குப் பணம் கொடுப்பதோடு அவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும் எளியவருக்கு பொருளாதார உதவி செய்வதுடன், எழைகளின் சுகத்திற்காக உண்மையாக ஜெபிக்கும்பொழுது, நீங்கள் அவ்வளவாக வியாதிப்படுவதில்லை (சங்கீதம் 41:13)
தொழுகை ஆராதனை:
“கடவுளை ஏன் தொழ வேண்டும்? வேறு வேலை இல்லையா?” என்று கேட்பார் உண்டு இன்றைய வேகமாக ஓடும் உலகில்.
“கடவுளை தொழுவதால் அவர் மனம் குளிரும் நான் வேண்டிக் கொள்வதை அப்போது அருளுவார்” என்னும் பக்திமான்கள் பலர் உண்டு.
அவர்கள் இருவருமே தவறான எண்ணம் கொண்டவர்கள். “பள்ளிக்கு ஏன் செல்லுகிறாய்?” என்று கேட்டதற்கு ஒரு சிறுவன் “என் ஆசிரியர் மனம் குளிருவதற்கு” என்றானாம் “நீ என் காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடுகிறாய்” என்று கேட்டதற்கு எங்கள் டாக்டர் மனம் குளிருவதற்கு என்றானாம்.
———————
சங் 41:13 “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான். தீங்குநாளில் கர்த்தர் அவளை விடுவிப்பார்” “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.”
Page 24
கடவுளைப் போற்றிப் புகழ்வது அவரைக் குளிர வைக்கும் நோக்கம் முதல் (காரணம்) அல்ல. அவர் நமது பரம தகப்பன் என்ற முறையில் நமது தொழுகையால் அவர் ஆனந்தம் கொள்வது உண்மைதான். ஆனால் அவருக்கு அதைவிட மிக மிகப்பெரிய முக்கிய வேலை பல உண்டு. அவரை நமது புகழாரத்தால் மயக்கவோ, இயக்கவோ முடியாது. அவர் முழு உலகத்திற்கும் கடவுள் ஆளுகை செய்பவர்.
அப்படியானால் தொழுகையின் முதல் நோக்கம்தான் என்ன? தொழுகை என்றால் என்ன? கடவுளின் குணாதிசயங்களை வாயால் உச்சரிப்பது, பாடுவது தியானிப்பது தான் தொழுகை. அவரது எல்லா நற்குணங்களையும் நினைப்பது, அறிக்கை இடுவது, பாடுவது தான் தொழுகை.
ஏதற்காக அதைச் செய்ய வேண்டும்? அதை செய்யச் செய்ய நமது குணம் மாற ஆரம்பிக்கும். தொழுகையில் கடவுளின் முக்கிய நோக்கம் நமது குணம் அவர் குணத்தைப் போலவே மாற வேண்டும் என்பது தான். நமது வாயால் பேசும், பாடும் தெய்வ குணம் முடிவில் நமது வாழ்க்கையில் காணப்படும். காணப்பட வேண்டும். இதுவே தொழுகையின் முதல் நோக்கம்
இரண்டாவது, தேவனை பாடித்தொழும்போது, விலகாத தடைகள் விலகும். நீதி நேர்மையான வாழ்க்கை, வேத தியானம், ஜெபம் இவைகளையும் தாண்டிய மிக மேலான நிலை தொழுகை. நீதி, வேத தியானம், ஜெபம் இவைகளுக்கு விலகாத சாபங்கள், நோய்கள், பேய்கள், தொழுகை செய்யச் செய்ய விலகும்.
ஆனால் தொழுகை செய்யும் முன் ஒரு நிபந்தனை. சுத்த வாழ்க்கை, சுத்த மனம், சுத்த வாய், அன்பான உறவு என்ற நிலை அவசியம் அல்லது அந்த நிலையை அடைய முயற்சிப்பேன் என்ற ஆர்வம், அர்ப்பணம் அவசியம். அந்த அர்ப்பணம் இல்லாது தொழும் தொழுகையினால் பயன் இல்லை.
Page 25
தொழுகை ஆராதனையை எந்த நேரத்திலும் செய்யலாம். எந்த இடத்திலும் செய்யலாம். எந்த வேலை மத்தியிலும், பிரயாணம் பண்ணும் போதும் செய்யலாம். உட்கார்ந்தோ, நடந்தோ நின்றோ, மண்டியிட்டோ செய்யலாம். அது நமது தகப்பனோடு பேசுவது போல. இயேசு நாதர் சொன்னார் “பிதாவை (கடவுளை, நமது பரம தகப்பனை) எவ்விடத்திலும் தொழுது கொள்ளும் காலம் வரும்” அவரை ஆவியோடும். (உள்மனதோடும்) உண்மையோடும் (மாய்மாலம் இல்லாமலும்) தொழுகொள்ள வேண்டும் என்றார் (யோவான் 4:23)
தாய்மார் சமையல் செய்யும் போதும், வீடு பெருக்கும் போதும். தாய்ப்பாலுட்டும் போதும் தொழுது கொள்ளலாம் மனச் சுத்தி ஒன்றே தேவை. மற்ற எதுவும் தேவை இல்லை தொழுகைக்கு உதவியான வசனங்கள், பாட்டுகள் புத்தங்கள், CD-கள் அனைத்து கிறிஸ்துவ கடைகளிலும் கிடைக்கும். தனிநபர் தொழுகை போல், குடும்பமாக அல்லது சிறிய குழுவாக தொழுகை மிகவும் வல்லமை உள்ளது. இவ்வித தொழுகையை மிகக் குறைந்தது தினம் ஒரு மணி நேரம் செய்யச் செய்ய மனச் சுகம் முதலில் ஆரம்பிக்கும். கோபம், பெருமை, பொறாமை, பிடிவாதம் குறையும். அதன்பின் உடல் சுகம் ஆரம்பிக்கும். பேய், பிசாசு, பில்லி சூனியம் விலக ஆரம்பிக்கும்.
சுயநீதி VS தேவன் கொடுக்கும் நீதி
(DIVINE RIGHTEOUSNESS VS HUMAN RIGHTEOUSNESS) நீதி, நேர்மை, தூய்மை இருவகைப்படும். ஒன்று மனிதன் தன் முயற்சியினால் நீதி, நேர்மை, தூய்மையாய் இருப்பது. மற்றது தேவனுடைய நீதி, நேர்மை, தூய்மை. மனிதனுக்கு நீதி, நேர்மை, தூய்மை மிகவும் அவசியம் தேவை. அது கடவுளுக்கு மிகவும் பிரியமான காரியம் அப்படிப்பட்ட மனிதனுக்கு பிரதிபலன் அளிப்பார். ஆனால் மிக ஆபத்தான (கொடிய நோய், உயிருக்கு ஆபத்து, பிசாசின் தொல்லை போன்ற) சூழ்நிலையில் இருக்கும் மனிதனுக்கு அவனது நீதி, நேர்மை, மட்டும் போதாது தேவநீதி அவனை மூட வேண்டும்.
Page 26
வானம் பூமிக்குமேல் எவ்வளவு பெரியதோ, அதுபோல தேவநீதி, மனித நீதியை விட மிக மிகப் பெரியது அருள் நாதர் இயேசு சிலுவையில் நமக்காய் மரித்ததினால், நாம் வேண்டிக்கொள்ளும் போது தேவ நீதி நம்மை மூடும். நம்மை சாபம், பேய், பிசாசு, கடும் நோய் கொல்ல முடியாது பேயையும், நோயையும் எதிர்த்து ஜெபிக்கும் போது நாம் சுய நீதியைக் காட்டி பிசாசை விரட்ட முடியாது ஏனென்றால் நாம் என்னதான் நீதிமானாய் இருந்தாலும் நம்மில் உள்ள சிறு குறையும் பிசாசுக்குத் தெரியும். அவன் பயப்பட மாட்டான், போக மாட்டான் சாத்தானுக்கு மறு பெயர் “குற்றம் சாட்டுபவன்”. இரவும் பகலும் நம்மில் குறைகண்டு பிடித்துக் கொண்டே இருப்பவன். ஆனால் இயேசு நாதரின் நீதி நம்மை முடியிருக்கிறதென்று, அவர் நாமத்தில் அதட்டும் போது அவன் பயந்து போய் விடுவான். மல்கியா 4:2, ரோமர் 6ம் அதிகாரம் முதல் 8ம் அதிகாரம் வரை, எபேசியர் முதல் அதிகாரம் ஆகியவற்றை தினம் வாசிக்கவும் இவ்வசனங்கள் இந்த மாபெரும் உண்மையை விளக்குகின்றன.
சுயநீதி, நேர்மை, தூய்மையில் வளருகிறவர்களுக்கு வரக்கூடிய மற்றொரு ஆபத்து என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை குறைவாக எண்ண ஆரம்பிக்கலாம். மற்றவர்களை குறை கூறலாம். இதுகண்டிப்பாக கடவுளுக்குப் பிடிக்காது (மத்தேயு 7:1-4) நம்மில் குறை இல்லாதவன் ஒருவனும் இல்லை. ஆகவே நீதி நேர்மை தூய்மையோடு, நாம் தாழ்மையையும் கடைபிடிக்க வேண்டும். இதற்குத்தான் தெய்வ நீதியை எப்பொழுதும் தியானிக்க வேண்டும், பேச வேண்டும் அறிக்கை செய்ய வேண்டும் அப்போது நோயும், பேயும் விலக ஆரம்பிக்கும்.
நீதி, நேர்மை தூய்மையில் வளருகிறவர்களுக்கு வரக்கூடிய மூன்றாவது ஆபத்து என்னவென்றால் முறுமுறுப்பு. நான் இவ்வளவு நன்மை செய்தும் நீதிமானாய் இருந்தும் கடவுள் எனக்கு ஏன் நோய், கஷ்டம், நஷ்டம் கொடுத்தார். பொல்லாதவன் நன்றாய் இருக்கிறான் என்ற முறுமுறுப்பு. ஏசாயா 49-4; மல் 3:14,15; யோபு 29 இதை விளக்குகிறது இதுவும் கடவுளுக்குப் பிடிக்காதது. கடவுளிடம் கோபப்பட்டு வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. ஏன்னெறால் பாவிகளுக்காய் சிலுவையில் மரித்த கடவுளை விட தியாகம் செய்தவர் நம்மில் யாரும் இல்லை. ஆகவே முறுமுறுக்காமல் அவர் தியாகத்தை மட்டும் தியான அறிக்கை செய்து அவர் நீதியை மட்டும் வேண்டிக் கொள்ளும் பொழுது நமக்கு விடுதலை கிடைக்கும்.
கடவுளிடம் பயபக்தி:
நம்மில் பலரும் பொதுவாக பயந்த சுபாவம் உள்ளவர்கள்தான். கடவுளின் பணியிலும், சமுதாயப் பணியிலும் வளர்ந்த பின்பு தான் மனிதரையோ, கஷ்டமான சூழ்நிலையையோ சந்திக்க ஓரளவு தைரியம் பெற்றேன்.
Page 27
எனக்கு வந்த புற்றுநோய்க்கு ஒருகாரணம் பயம், சூழ்நிலைகளைக் குறித்த நெருக்கம் (stress) இருந்திருக்கலாம் என இப்போது எண்ணுகிறேன். இன்றைக்கு பெரும் வியாதிகள் பல பெருகுவதற்கு ஒருகாரணம் பயம். மனிதன், மனிதனுக்கு மிகவும் பயப்படுகிறான். மனிதன், மனிதனை நம்ப முடியவில்லை. இதனால் (insecurity level) கலக்கம், கவலை மிகவும் அதிகரித்திருக்கிறது. (stress level) நெருக்கம் அதிகரித்திருக்கிறது. மனிதாபிமானம்,”அன்பு குறைந்தது விட்டது. காரணம் அக்கிரமம் பெறுகி விட்டது.” (மத் 24:12) வாழ்க்கையின் நெருக்கம், பயம், அழுத்தத்தினால் நோயாளி ஆனவன், நோயையும், சேர்த்து இப்போது கவலை கொள்ள ஆரம்பிக்கிறான் அதனால் நோய் கூடுகிறது.
இதற்கு நிவாரணம் தான் என்ன? அதை நாம் ஏசாயா 51:12-14, 8:12-13 பகுதியில் தெளிவாக வாசிக்கலாம். மனிதபயம், சூழ்நிலைபயம் போன்ற பயங்களுக்கு மருந்து கடவுள் பயம். அவரை மட்டும் பிரியப்படுத்துவது. அவர் சொல்லும் வாக்கை மட்டும் நம்புவது, கீழ்படிவது நீதி நேர்மையாய் நடப்பது. பின் விளைவை (consequence) பற்றி அதிகமாக சிந்திக்காமல், கவலைப்படாமல் இருப்பது. இதை நான் சமீப காலமாகத்தான் அதிகம் கற்று வருகிறேன்
சிலருக்கு மரண பயமே மரணத்தை வேகமாகக் கொண்டு வந்து விடுகிறது. மரணத்தை மரணத்தால் வென்ற இயேசு நாதர் நூறுமுறை “பயப்படாதே” என்றார். முக்காலத்தையும் ஆளும் ஆண்டவர் இறந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து வந்தார் “விண்டவர் கண்டதில்லை கண்டவர் விண்டதில்லை” என்பது பழமொழி (செத்தவன் திரும்பி வந்து அக்கரை எப்படி இருக்கிறதென்று சொன்னதில்லை. சொல்பவன் இன்னும் செத்ததில்லை.)
திரும்பிவந்து சொன்னவர் சத்குரு இயேசு ஒருவரே. திரும்பி வந்து அவர் சொன்ன முதல் வாக்கு “சாந்தி” (பயப்படாதே ) என்பதே. பயப்படுவதற்கான பிரதேசம் அது அல்ல. பயப்படுவதற்கான எதிர்காலம் அது அல்ல ஏனென்றால் திரிலோக அதிபதி எங்கு எல்லாம் இருக்கிறாரோ அங்கு போகும் பக்தர்கள், பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஓரே ஒரு நிபந்தனை, கடவுளுக்கு மட்டும் பயப்படு அப்போது மனிதபயம், சூழ்நிலை பயம், வியாதிபயம் மரணபயம் நீங்கும். உடல் சுகம் திரும்ப வளர ஆரம்பிக்கும்.
Page 28
Generational Block – தலைமுறைத் தடை
பாவங்களை மூன்று வகைப்படுத்தலாம்.
அ) தனக்கே தீங்கிழைக்கும் பாவம்: குடி, போதை மருந்து, பாலியல் அசுத்தம். இவற்றால் சொந்த உடல், மனது, உணர்வுகள் போன்றவற்றைக் கறைப்படுத்துதல். இத்தகையப் பாவத்தினால் தன் குடும்பத்திற்கு பாதிப்புகள் உண்டாகுமே தவிர, அவர்களுடைய வருங்கால சந்ததியைப் பாதிப்பதில் குறைந்த வாய்ப்புகளே உண்டென்று தோன்றுகிறது.
ஆ) பிறருக்குத் தீங்கிழைக்கும் பாவம்: சூனியம், மாந்திரீகம், பொய் வழக்குகள், பொய்ச் சாட்சிகள், ஏமாற்றுதல், மற்றவர்களின் பிழைப்பை கெடுத்தல், குடும்பத்தை கெடுத்தல், பெயரைக் கெடுத்தல், விபச்சாரம் போன்றவைகளாகும். முற்றிலும் மனந்திரும்பினால் ஒழிய இச்சாபங்கள் சம்பந்தப்பட்டவரின் எதிர்கால சந்ததியைப் பாதிக்கலாம்.
இ) தேவனுடைய மகத்துவத்தைப் பாதிக்கக் கூடிய பாவங்கள்: தூஷணம், மிக முக்கியமான தீர்மானங்களில் தேவசித்தம் வெளிப்படுத்தப்படும்பொழுது அதற்குக் கீழ்ப்படியாமலிருத்தல், தலைவர்கள் தங்களைப் பின்பற்றுவோரில் அநேகரைப் பாதிக்கும் அளவில் பாவம் செய்தல் போன்றவைகளாகும்.
—————————
மத்தேயு.7:1 “மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள் “
ஏசாயா 49:14 “கர்த்தர் என்னைக் கை விட்டார் ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறான். தாய் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இறங்காமல் மறப்பாளோ?
மல்கியா 3:14-17 “தேவனை சேவிப்பது வீண், என்று சொல்லுகிறீர்கள் தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள். நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் வித்தியாசத்தை காண்பீர்கள்”
யோபு 2:9 “அவன் மனைவி நீர் இன்னும் உமது உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ தேவனை சபித்து ஜீவனை விடும் என்றாள். இதற்குப் பின்பு யோபு 140 ஆண்டுகள் உயிரோடிருந்து நான்கு தலைமுறை பிள்ளைகளைக் கண்டான்”
ஏசாயா 51:12-14 சாகப்போகிற, புல்லுக்கு ஒப்பான மனிதனுக்குப் பயப்படுகிறதற்கும், உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
ஏசாயா 8:12-13 “அவர்கள் பயப்படுகிற பயத்தின் படி நீங்கள் கலங்காமல் கர்த்தரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாய் இருப்பாராக.”
Page 29
இப்படிப்பட்ட சில காரியங்கள் பின் வரும் சந்ததியில் விளைவை ஏற்படுத்தலாம்.
சுருங்கக் கூறின், உங்களுக்கு வந்துள்ள நோயானது, ஜெபம், மருத்துவம், மனநல சிகிச்சை அல்லது மற்ற இயற்கை சிகிச்சைகளினால் குணமாகவில்லயென்றால், அகற்றப்பட வேண்டிய சாபங்கள், பரம்பரை தடைகள் ஏதும் இருக்குமா என்பதை சோதித்தறியும்படி முதிர்ந்த தேவஊழியர் யாராவது ஒருவரை அணுகும்படி உங்களை வேண்டுகிறேன். இதனைச் செய்வதினால் நீங்கள் ஒன்றையும் இழந்து போவதில்லை.
சில கேள்விகளுக்குப் பதில்:
- தேவன் குணமாக்கும் வழிகள் யாவை?
முக்கியமாக நோயுற்றவரின் விசுவாசம் (நம்பிக்கை) மூலம் நோயுற்றவரின் குடும்பத்தினர், பக்தியுள்ள போதகர் அல்லது சபை மூப்பர்கள் அல்லது சாதாரண விசுவாசிகள் ஆகியோரின் விசுவாசமும், ஜெபமும் நோயுற்றவரின் விசுவாசத்திற்குக் கூடுதல் ஆதரவாக பெலனாக இருக்கும், பேர் பெற்ற குணமாக்கும் பிரசங்கியார்தான் உன்னைக் குணமாக்க தேவையில்லை. குணமாக்கும் வரம் பெற்ற பக்தியுள்ள விசுவாசியை, ஊழியக்காரரை அணுகுவதும் உதவலாம்.
2. என்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்ள நான் எங்கே போக வேண்டும்? என்னுடைய சபைக்கா அல்லது குணமாக்கும் கூட்டங்களுக்கா?
நீங்கள் விசுவாசியாக இருந்தால் உங்கள் சபைக்குச் சென்று. உங்களுடைய சுகத்திற்காக முழு சபையும் ஜெபிக்கும்படி கேளுங்கள் உங்களுடைய சுகத்திற்காக ஜெபிக்கும்படியான ஆவிக்குரிய அதிகாரமும், பொறுப்பும் தேவனால் சபைக்கு அருளப்பட்டிருக்கிறது (யாக்கோபு 5:14-16). ஆனால் இன்று அநேக சபைகள் இந்த அதிகாரத்தையும், வல்லமையையும் (எபேசியர் 1:19) பயன்படுத்துவதில்லை.
சுகமளிக்கும் பொதுக் கூட்டங்களின் நோக்கம், விசுவாசி அல்லாதவர்கள் குணமாகுதலின் மூலம் ஆண்டவரை அறிய. இதன் காரணமாகவே, இவ்விதமான பொதுக் கூட்டங்களில் விசுவாசிகளை விட மற்றவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் பெரிதும் சுகம் பெறுகின்றார்கள். இருப்பினும், இவ்விதமான கூட்டங்களில் கலந்துகொள்வதினால் சுகமடைவதற்கான உங்களுடைய விசுவாசம் பலப்படும். அங்கேயும் உங்களை தேவன் சுகப்படுதக் கூடும்.
Page 30
3. என்னுடைய சுகத்திற்காக நான் போக வேண்டிய சிறந்த பிரசங்கியார் யார்?
எந்த ஒரு தனி நபரும் அல்ல. நீங்கள் சுகத்தைப் பெறும்படி அநேகரின் ஜெபம், ஆலோசனை, வெளிப்படுத்தல். சீர்திருத்தல், விசுவாசம் ஆகியவற்றால் (தேவனால்) ஆயத்தமாக்கப்படுகிறீர்கள். இவ்வித செயல்பாட்டில் கடைசி நபர் யாராகவும் இருக்கலாம் பெரிய பிரசங்கியாக இருக்கலாம். அதிகம் கற்றறியாத ஓர் ஜெபிக்கும் தாயாக இருக்கலாம்.
4. நான் எவ்வளவு நேரம்/எவ்வளவு அதிகமாக ஜெபிக்க வேண்டும்?
உங்களால் முடிந்த நேரம் உங்களால் முடிந்த அளவு ஜெபியுங்கள்‘’சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள்’’ என்று கர்த்தர் கூறினார். உங்களுடைய தப்பிதங்கள், பாவங்கள், மீறுதல்கள் போன்றவற்றைக் கர்த்தர் உங்களுக்குக் காட்டும் வரை ஜெபியுங்கள். மேலும், உங்களுடைய சுகத்திற்காக ஜெபிக்கும்படி எத்தனை பேரிடம் கேட்கக்கூடுமோ அத்தனை பேரிடம் கேளுங்கள். மிகவும் முக்கியமானது யாதெனில், சுகத்திற்காக உங்களை ஆயத்தப்படுத்தும்படி உங்கள் விசுவாசத்தை (நம்பிக்கையை ) வளர்க்கக் கூடிய வேதவாக்கியங்களை தியானித்து, அவற்றை வாயினால் அறிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
5. என்னுடைய வேலையினால்/என்னுடைய குடும்பக் காரியங்களினால் ஜெபிக்கவும், வேத வாக்கியங்களைத் தியானிக்கவும் சொற்ப நேரமே எனக்குள்ளது.
கர்த்தர் உங்களுடைய மட்டுப்பாட்டை அறிந்திருக்கிறார். உங்களுடைய வாஞ்சைக்கும், முயற்சிக்கும் ஏற்ப அவர் உங்களுக்குப் பிரதிபலன் அருளுவார். இருப்பினும், தொலைக்காட்சி, செல்போன்
வீண்பேச்சு, வீண் அலைச்சல் தேவையற்ற காரியங்கள் அனைத்துக்குமான நேரத்தை சுத்தமாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சுகமாகுதல் என்ற ஒரே காரியத்தின் மீது உங்களுடைய மனதைச் செலுத்துங்கள்.
Page 31
6. நான் என்னுடைய வேதாகமத்தை வரிசையாக வாசிக்கிறேன் என்னுடைய சுகத்திற்காக கூடுதலாக வாசிக்க வேண்டுமா?
ஒருவர் ஆரோக்கியமாக இருந்து, சரிசம உணவை உட்கொள்ளும் பொழுது, வைட்டமின் மாத்திரைகள் அல்லது மருந்துகள் உட்கொள்ளத் தேவையில்லை. அதுபோல, ஒழுங்காக வேதம் வாசிப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்காக உணவு உட்கொள்ளுவதைப் போன்றது. ஆனால், நீங்கள் வியாதிப்படும்பொழுது, நீங்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்தை கிரகித்துக்கொள்ள முடியாததால். நீங்கள் மருந்தும், ஊட்டச்சத்துணவும் உட்கொள்ள வேண்டியது (Nutrition) அவசியமாகிறது.
அவசரகாலங்களில் நரம்பு வழியாக ஊட்டச்சத்தும், மருந்தும் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதைப்போல, அதிகமாக வியாதிப்பட்டிருக்கும் வேளையில், விசுவாச அறிக்கை, துதி வாக்குத்தத்தங்கள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட வேதவசனங்களைப் பயன்படுத்த வேண்டும் கிறிஸ்தவப் புத்தகக் கடைகள் மற்றும் இணைய தளங்களில் இவை கிடைக்கும். இவைகள் ஊட்டச்சத்தாகவும், மருந்தாகவும் அமைகின்றன இப்புத்தகத்தில் கடைசியில் முக்கியமான 114 வசனங்களும் புத்தக வரிசையும் காண்க.
7. எவ்வளவு சீக்கிரத்தில் நான் சுகத்தை எதிர்பார்க்கக் கூடும்?
தேவன் கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர், மன்னிக்கிறவர், நேசிக்கிறவர், ஞானமுள்ளவர். எவ்வளவு சீக்கிரம் அவர் குணமாக்க வேண்டுமென்று ஒருபோதும் கட்டளை இடாதே அவர் ஒரு நாளில், ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில், உடனடியாக, அல்லது மிக மெதுவாகக் குணமாக்கலாம். உன்னுடைய கீழ்ப்படிதலையும், இதர பல காரணங்களையும் இது சார்ந்துள்ளது.
———————
யாக் 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவார்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்”
எபே 1:19 “விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமை”
Page 32
8. இயேசு நாதரிடம் வந்த அனைவரும் உடனே சுகம் பெற்றார்கள் நாம் ஜெபிக்கும் போது ஏன் உடன் சுகமாவதில்லை?
அவர் சர்வ வல்ல தேவன். இரண்டாவது, இயேசு நாதரிடம் வந்த அனைவரும் சுகமானார்கள். ஆனால் அனைவரும் உடனே சுகம் ஆனார்கள் என்று கூறப்படவில்லை. மூன்றாவது, அவர் ஊழியம் செய்த காலம் மூன்றே ஆண்டுகள் அதற்குள் அனைத்துப் பணிகளையும், போதனைகளையும், விசேஷமாக பாவ பரிகார பலியையும் செய்து முடிக்க வேண்டிய அவசரம் (யோவான் 9:4) ஆகவே அவர் சுகமாக்கும் பணியில் மிக அதிகமான, துரிதமான வல்லமை வெளிப்பட்டது. சுகம் வெகு வேகமாக வெளிப்பட்டது.
நான்காவது, அற்புத சுகம் முதலில் பெற்று, பின்னர் மனம் திரும்பாது வாழ்க்கையை சீர் படுத்தாமல் போய், ஆத்துமாவை இழந்தவர்கள் அநேகர் அன்றும் உண்டு (யோவான் 5:14) இன்றும் உண்டு அதைவிட, சுகம் தாமதம் ஆனாலும் முதலில் மனந்திரும்பி, பின்பு சுகம் பெறுவது சாலச் சிறந்தது. நாம் உடல்சுகம் உடனே பெறுவது. கடவுளின் தலையான நோக்கம் அல்ல நம் உள்ளம் சுகம் பெற வேண்டும் என்பதே கடவுளின் மிக முக்கிய நோக்கம்.
9. கொடும் வியாதிகள், ஆண்டவருக்கு சாட்சியாக, விசுவாச வாழ்க்கையில், நம்மில் சிலர், சுமந்து செல்ல வேண்டிய சிலுவையா (பாரமா)?
சத்திய வேதத்தில் இதற்கு தகுந்த ஆதாரம் இல்லை ஆண்டவருக்கு சாட்சியாக நாம் படவேண்டிய கஷ்டங்கள், பாரங்கள், நஷ்டங்களின் பட்டியலில் பெரும் வியாதி எழுதப்படவில்லை சிறு வியாதிகள் பலவீனங்கள், மூப்பு தளர்ச்சிகள், உழைப்பின் தளர்வுகள் வரலாம் ஆனால் உயிர் கொல்லி வியாதிகள், வாழ்வை முடக்கும், குடும்பத்தை உடைக்கும், நோய்கள் எழுதப்படவில்லை என்று தோன்றுகிறது ஆனால் அப்படிப்பட்ட வியாதியில் சுகம் பெறாத போதும் விசுவாசத்தில் நிற்கும் விசுவாசிகள் உழைக்கும் ஊழியக்காரர் யாரையும் நான் நியாயம் தீர்க்க மாட்டேன்.
Page 33
அவர்களை குறை கூற நான் யார்? மாறாக அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பேன் ஊக்கப்படுத்துவேன் அவர்கள் குடும்பத்தை மனதார வாழ்த்துவேன்
கொரோனா கொள்ளை நோய் காலத்தில் தெய்வ பக்தி உள்ளவர்கள் பலர் மரித்தது ஏன்? சில மூத்த ஊழியாகளும் மரித்தது ஏன்?
இதற்கு எளிதான பதில் என்னிடம் இல்லை நானும் இந்த இழப்பினால் மிக அதிக வேதனைக்குள்ளானேன் அழுதேன் புலம்பினேன் ஆண்டவரிடம் விளக்கம் கேட்டேன் ஓரளவு பதில் மட்டுமே இதுவரை பெற்றுருக்கிறேன் அதை எனது வீடியோவில் பார்க்கவும்.
இன்றைய நாட்கள் உலக முடிவுக்கு மிக நெருங்கிய நாட்கள் நீதிக்கும் அநீதிக்கும் நன்மைக்கும் தீமைக்கும் கடும் போராட்டம் நடக்கிறது (மத்தேயு 24ம் அதிகாரம், 2தீமோதேயு 3ம் அதிகாரம் வாசிக்கவும்) இக்கடும்போரின் இடையே சில நல்லவர்களும் காயப்படுகிறார்கள் போர் பதத்தில் இதை collateral damage என்று சொல்லுவார்கள்.
இரண்டாவது காரணம் சில ஊழியர்கள், தொண்டர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பல கொரோனா நோயளிகளை மீட்டனர் அவர்கள் சந்ததி பெருக்கமாய் ஆசீர்வதிக்கப்படும். இதுபோன்று பண்டை நாட்களிலும் மிஷினரிமார் பலதேசம் சென்று நோயையும் பேயையும் விரட்டி சேவை செய்யும் போது பலர் நோய்வாய் பட்டனர், சிலர் மரித்தனர் அவர்களின் சந்ததி பெருக்கமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்.
10. சுகம் பெறுவதற்குமுன், படும் வேதனையின் மத்தியில், எப்படி நன்றி துதி செலுத்துவது? அது பைத்தியச் செயல் அல்லவா?
முதற்காரணம்: கிடைத்தவற்றிற்காய் நன்றி செலுத்து. இரண்டு விரல் விளங்காதவன், இரண்டு கை விளங்காதவனைப் பார்த்தபின் கிடைத்ததற்காய் நன்றி செலுத்தினான். எவரது வாழ்க்கையிலும், அவரை விட கஷ்டப்படுவோர் உண்டு. கிடைத்தற்காய் நன்றி சொல்லச் சொல்ல கிடைக்க வேண்டியது கிடைக்கும்
Page 34
இரண்டாவது காரணம்: அதிகாரமும் (power) கருணையும் (mercy) உள்ள ஒரு பெரிய ஆபீசருக்கு எழுதும் மனுவின் கடைசியில் ‘Thanking you in anticipation’ என்று எழுதுகிறோம். அதிகாரம் உள்ள பலருக்கு கருணை இல்லை. கருணை உள்ள பலருக்கு அதிகாரம் இல்லை. கடல் போன்ற கருணையும் சர்வ அதிகாரமும் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு செலுத்தும், முன் நன்றிதான் (anticipatory thanks) துதி, ஸ்தோத்திரம்.
மூன்றாவது காரணம்: தெய்வீக சுகமளிப்பு முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது. சிலுவையில் நமது சுகவீனம் ‘முடிந்தது’ (ஏசாயா 53:5, யோவான் 19:30) முக்காலத்துக்கும் ஆண்டவரான தேவன் கையில் சுகம் வந்து விட்டது. நன்றி, துதி சொல்லச் சொல்ல அது நம் கையில் வந்து சேரும்.
11. தவிர்க்கப்பட வேண்டிய காரியங்கள் யாவை ?
“இறுதி கட்ட நோய்” (terminal illness) என்பது போன்ற சுயதோல்வியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நோயின் எந்தக் கட்டமானாலும் தேவனால் குணமாக்கக் கூடும் (யோவான் 11:43), “நோயின் இறுதிக் கட்டத்தில்” இருந்த நோயாளிகளில் சிலர் குணமாக்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். பணித்தளங்களில் அநேகர் மரணப்படுக்கையிலிருந்தும், சிலர் மரணத்திலிருந்தும் எழுப்பப்பட்டிருக்கிறார்கள் (மத் 10:7-9). “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று இயேசு கூறினார் (மத்.17:20). “திருப்பக் கூடாத நோய்” (irreversible illness) என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மனிதனால் கூடாதது, தேவனால் கூடும் (மத் 19:26). இது பரம்பரை நோய் (hereditary) என்பது போன்ற வார்த்தைகளையும் தவிர்த்து விடுங்கள். மரபுச் சங்கிலியை தேவனால் உடைக்க முடியும்.
———————————–
யோவான் 9:4 “பகற்காலம் இருக்கும் மட்டும் நான் கிரியை செய்ய வேண்டும் இராக்காலம் வருகிறது”
யோவான் 5:14 “இயேசு அவனை பின்பு கண்டு ‘இதோ நீ சுகமானாய், அதிக கேடானது ஒன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே’ என்றார்”
மாற்கு 9:47 “நீ இரண்டு கண் உடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப் படுவதைப் பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது நலம் “
Page 35
12. எல்லா நோய்களையும் குணமாக்கும்படி நாம் தேவனிடம் ஜெபிக்க முடியுமா?
நாம் இங்கே உயிரை கொல்லும், வாழ்வை முடங்கப் பண்ணும் நோய்களைப் பற்றி பேசுகிறோம். இதற்காக குறிப்பாக, நோயாளி இளவயது அல்லது நடு வயது அல்லது முதிர்ந்தும் அநேகருக்கு தேவையானவராக இருந்தால் நாம் மிக எதிர்பார்ப்போடு ஜெபிக்க வேண்டும்.
13. உடல் சுகமாகுதல் தேவனுடைய இறுதியான நோக்கமல்ல. அவருடைய குணாசீலத்திற்கு (character) ஒப்பாக நம்மை மாற்றுவவதே அவருடைய இறுதியான நோக்கமாகும். அதற்கு தேவன் சுகமாக்குதலைப் பயன்படுத்துகிறார்.
கீழ்கண்ட வாக்குகளை தினமும் பலமுறை வாயினால் அறிக்கை செய்து, தியானித்து, கடைப்பிடித்துவந்தால் சுகம் பெறுவதற்கான விசுவாசம் (நம்பிக்கை) வளரும். தனியாகவும், குடும்பமாகவும் தினம் அறிக்கை செய்யுங்கள்.
வாக்குகளைப் படிக்க லிங்க்கை கிளிக் செய்யவும்
https://ebesunderraj.in/wp-content/uploads/2022/11/HealingScriptures-Tamil.pdf
இணையதளம்: www.ebesunderraj.in
அச்சிட்ட புத்தகத்தை பெறுவதற்கு: திரு. தாயப்பன்: 9840786023 / 044 22234626
————————
ஏசாயா 53:5 “அவருடைய காயங்களால் நாம் சுகம் ஆனோம்”
யோவான் 19:30 “முடிந்தது” என்று இயேசு சொன்னார்.
மத் 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள் இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
மத் 19:26 மனுஷரால் இது கூடாததுதான் தேவனாலே எல்லாம் கூடும்.
Page 36